(லங்காஈநியூஸ்- 2019 ஏப்ரல் 20, பி.ப.05 30) கடந்த புதுவருட புனித நேரத்தில் அனுராதபுரம் கூம்புச்சம்குளம் பகுதியில் உள்ள இலங்கை மெதடிஸ்ட் சபைக்கு சொந்தமான ஆராதனை மத்திய நிலையம் ஒன்று மத அடிப்படைவாதிகள் சிலரினால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச தரப்பின் தாமரை மொட்டு பிரதேசசபை உறுப்பினர் நளின் சிறிவர்தன மற்றும் அவரது குண்டர்கள் தொடர்புபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் தெரிந்தும் பொலிசார் குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராகவோ அல்லது அவரது குழுவிற்கு எதிராகவோ இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் அரசாங்கம் மார்தட்டி கூறும் நல்லிணக்கம் எங்கே என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அனுராதபுரம் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மெத்தடிஸ்ட் ஆராதனை மத்திய நிலையம் இயங்கி வருவதுடன் அங்கு வலது குறைந்த நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. குறித்த மத்திய நிலையத்திற்கு இதற்கு முன்னரும் மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
புதுவருடத்தின் புனித நேரத்தில் கிறிஸ்தவ மதத்தவர்கள் குறித்து மத்திய நிலையத்திற்கு வந்து ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த நிலையத்தை சுற்றி வளைத்த 25 பேர் கொண்ட குழுவினர் கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பட்டாசுகளை கொளுத்தி எரிந்து கிறிஸ்தவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தின் போது இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வணக்கத்துக்குரிய பிதா ஆசிரி பி பெரேரா அருள் தந்தையும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பான முழுமையான வீடியோ காட்சிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த போது தாம் உள்ளிட்ட பக்தர்கள் சிறைடுத்தப்பட்டதை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவித்து அவர் அதனை கண்டு கொள்ளாததால் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து சில வினாடிகளில் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி தனது குழுவினருடன் வந்து கலகத்தை அடக்கிய விதம் தொடர்பில் காணொளியில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஆனால் கலகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட எந்த சந்தேகநபர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்குமூலம் பெற்றுக் கொண்டு அனைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் லங்காஈநியூஸ் இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த அனைத்து கலகங்களையும் ஏற்படுத்தி போலீசாருக்கும் அழுத்தம் கொடுத்து சட்டத்தை நாய் கூட கணக்கெடுக்காத வகைகள் செய்திருப்பது அனுராதபுரம் நகர சபையின் தாமரை மொட்டு கட்சியின் உறுப்பினர் நளின் சிறிவர்தன என உறுதியாகியுள்ளது. 'இன்னும் எந்த நாயாவது வந்தால் எலும்பை முடிப்பேன்' என பொலிஸ் நிலையத்தில் வைத்து அச்சுறுத்தல் விடுத்த நளின் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிகிறார்.
இனவாத மதவாத அடிப்படைவாத சிந்தனையில் மஹிந்த ராஜபக்ச அணியினர் இந்த அளவு போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து சட்டத்தை மதிக்காத செயற்படுவார்கள் நல்லாட்சி அரசாங்கம் கூறும் நல்லிணக்கம் என்ற சொல் பச்சை பொய்யாகும். NCEASL என்ற கிறிஸ்தவ அமைப்பு விடுத்துள்ள ஆய்வு அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள்்் மாத்திரம் இலங்கையில் 35 கிறிஸ்தவ மத நிலையங்களுக்குு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையான சட்ட நடவடிக்கைகள்் எடுக்கப்படவில்லை.
இந்த மூன்று மாத காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளையின் கீழ் போலீசார் செயல்பட்டனர். தாமரை மொட்டு அணியிடம் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் தகுதியைப் பெற சிறிசேன இவ்வாறான மத அடிப்படைவாத விடயங்களை கண்டுகொள்வதில்லை. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அனுமதி அளிப்பதில்லை.
தாக்குதல் தொடர்பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வணக்கத்திற்குரிய ஆசிரி பி பெரேரா வெளியிட்டுள்ள காணொளி பின்வருமாறு
---------------------------
by (2019-04-21 12:57:34)
Leave a Reply