~

அநுர 15ஆம் திகதி லண்டன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு..!

(லங்கா ஈ நியூஸ் -2024.ஜூன்.14, பி.ப.11.45) எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் திகதி லண்டனில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அதன் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க ஐக்கிய இராச்சியம் வரவுள்ளார்.

கடந்த காலங்களில் வெளிநாட்டில் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ள அவர், லண்டன் பொதுக்கூட்டமே அவரது கடைசி வெளிநாட்டு பொதுக்கூட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டத்தின் விளம்பரத்திற்காக உலகப் புகழ்பெற்ற லண்டன் டபுள் டெக்கர் பேருந்துகளை அலங்கரிக்க ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்லோவில் உள்ள கிரிஸ்டல் கிராண்ட் மண்டபத்தில்  பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. உரையின் தமிழ் மொழிபெயர்ப்பும் அதே சந்தர்ப்பத்தில் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுர திஸாநாயக்கவிடம் கையளிப்பதற்காக கனடா தமிழ் மக்களிடம் இருந்து மகஜர் ஒன்றைக் கொண்டு கனடாவில் இருந்து பிரதிநிதிகள் குழு ஒன்று இங்கிலாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் கூட்டத்தின் திகதி மற்றும் நேரம்

15 ஜூன் 2024 மதியம் 2:00 மணிக்கு

இடம் - கிரிஸ்டல் கிராண்ட், 3 பாத் வீதி, ஸ்லோ, SL1 3UA.

விசாரணைகளுக்கு - 07898 642683, 07702 007517, 07984 396378, 07940 576701, 07456 255522

ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட சுவரொட்டி இ

---------------------------
by     (2024-06-14 11:54:34)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links