எழுதுவது சுந்தரா
(லங்கா ஈ நியூஸ் 2020 செப்டம்பர் 17 பிற்பகல் 09.15) அனைத்து சாதகமான விடயங்களையும் தலைகீழாக புரட்டி சர்வ நாசத்தை தமது கொள்கையாக வைத்துள்ள ராஜபக்சக்களின் குடும்ப அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அபூர்வமான வீதி போக்குவரத்து சட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டு நாட்டு மக்கள் அல்லோலக் கல்லோலப் பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தினால் வீதி போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காக பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு மாத்திரம் அதனுடைய வேகம் மற்றும் நேரத்தை குறைத்துக் கொள்வதற்கான Bus Priority lane பஸ் முன்னுரிமை பகுதி ஒன்று வீதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. சாதாரணமாக பஸ் ஒன்றில் 60 பயணிகளும் கார் ஒன்றில் இருவரும் பயணிக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு பஸ் தனது பாதையில் மாத்திரம் பயனிக்கும் போது 30 கார்களுக்கான இடத்தை ஒதுக்கி கொடுப்பதுடன் அதன்மூலம் பல பயணிகள் நன்மை அடைவதுடன் தங்களுடைய நேரத்தையும் முகாமை படுத்திக் கொள்கின்றனர்.
ஆனாலும் தற்போதைய அரசாங்கம் பஸ் முன்னுரிமை பகுதியில் முச்சக்கர வண்டி முன்னுரிமைப் பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள் முன்னுரிமை பகுதி என்பவற்றை ஒரே பாதையில் வைத்துவிட்டு ஏனைய கார் ஜீப் போன்ற தனியார் வாகனங்களுக்கு ஏனைய வீதி பகுதியை ஒதுக்கி உள்ளனர். இவ்வாறு செயல்படுத்துவதற்கு அறிவுரை வழங்கியது யார் என தெரியவில்லை. ஆனாலும் இது பெரியவர் வழங்கிய அறிவுரை என்று இறுதியில் கூறுவர்.
இதனால் பஸ் முன்னுரிமை பகுதியில் Bus Priority lane முச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கிள்கள் நிறைந்ததால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏனைய கார் மற்றும் ஜீப் வண்டிகள் பயணிக்கும் வீதி பகுதியில் யாருமே பயணிக்காமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த வெறிச்சோடி காணப்பட்ட வீதியில் பயணிக்க முச்சக்கர வண்டி சாரதிகள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் முன் வரவில்லை. காரணம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீர் கேட்டு துப்பாக்கிச் சூட்டில் உயிர் பலி எடுத்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக தனியார் வாகனங்கள் பயன்படுத்துவது கட்டாயம் அதிகரிக்கும் என்பதுடன் அதன் பின்னர் குறித்த வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் கொழும்பு நகரம் பாரிய போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பது தெளிவான உண்மை.
3 பகுதிகளாக உள்ள ஒரு பெரிய வீதியில் ஒரு பகுதியில் சாதாரண மக்கள் பயணிக்கும் பஸ் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் என்பவற்றை இறுக்கிவிட்டு ஏனைய இரண்டு பகுதிகளை சொகுசு வாகனங்களில் பயணிக்கும் நபர்களுக்கு சுதந்திரமாக பயணிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த இந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொடுத்த மக்களுக்கு வழங்கும் சிறந்த பாடம் எனவும் ஆனால் நமக்கு நாடு முக்கியம் என்று கூறி அடுத்த முறையும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொடுக்க தயாராகுவர் என்ற அடிப்படையிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ராஜபக்ச ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் போலியான உருவம் நாளுக்கு நாள் கலைக்கப்பட்டு உண்மையான உருவம் அவர் தொடர்ந்து முன்னெடுக்கும் முட்டாள்தனமான கேவலமான கேடுகெட்ட கேலிக்குரிய வேலைகள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு வருகிறது. இவரது ஏனைய வேலைகள் போலவே இந்த திட்டமும் ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும் என்பது மாத்திரம் உண்மை.
---------------------------
by (2020-09-18 05:42:34)
Leave a Reply