~

நீதி அரசர்களை பின் தொடர்ந்து வேவு பார்க்கும் அரச புலனாய்வு சேவை..!

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 20 முற்பகல் 10.50) கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் 'அரச புலனாய்வு சேவை' (SIS) பிரிவை பயன்படுத்தி நாட்டிலுள்ள நீதி அரசர்களின் சகல இரகசியங்கள் உள்ளடங்கிய 'பாதுகாப்பு அறிக்கை' ஒன்றை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பட்டியலில் அனைத்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளடங்குவதுடன் தெரிவு செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த பாதுகாப்பு அறிக்கையானது நீதியரசர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் ஒன்று அல்ல என்பதை கீழ்காணும் விடயங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். குறித்த நீதி அரசர்களின் குடும்பம் மற்றும் அவர்களது குடும்ப வரலாறு, தற்போதைய குடும்ப சூழ்நிலை, கடந்தகால மற்றும் தற்கால அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விபரம், அவர்களது உயர் கல்வி காலத்தில் இருந்த சகல தொடர்புகள் விபரங்கள், அரச சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் காணப்படும் உறவுகள் தொடர்புகள், குறிப்பிட்ட காலங்களில் இவர்களுடன் நெருங்கி பழகிய நபர்களது தொடர்புகள் விபரங்கள், நீதி அரசர்களின் குடும்பம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள வியாபார நடவடிக்கைகள் மற்றும் விபரங்கள், அவர்களது அரசியல் தொடர்பு சம்பந்தமான விபரங்கள், நீதி அரசர்களின் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகள் தொடர்பு வைத்துள்ள நபர்கள் தொடர்பான விபரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த பாதுகாப்பு அறிக்கையில் கூடிய கவனம் செலுத்தப்படும் பகுதிகளாக உள்ளன. அத்துடன் விசேடமாக நீதியரசர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்கள் அடங்கிய தகவல்களும் இதில் சேர்க்கப்பட உள்ளன.

தேவையான நேரங்களில் குறித்த நீதி அரசர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க  வாய்ப்பு உள்ளது. 

அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பிரிகேடியர் சுரேஷ் சாலி நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த புதுமையான 'நீதியரசர்கள் பாதுகாப்பு அறிக்கை' தயாரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (பிரிகேடியர் சுரேஷ் சாலி தேசிய புலனாய்வு பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார் என லங்கா ஈ நியூஸ் இதற்கு முன்னர் வெளியிட்ட செய்தி அரச புலனாய்வு சேவை பிரதானி என திருத்தப்பட வேண்டும்)

இராணுவம் போலீஸ் மோதல்.. 

அரச புலனாய்வு சேவை பொலிஸ்மா அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் பிரதானியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாமல் இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இது நாட்டின் புலனாய்வு தகவல்களை சர்வதேசத்துடன் பகிர்ந்து கொள்ளும்போது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் விடயமாக அமையக் கூடும். காரணம் சர்வதேச போலீஸ் என்று சொல்லப்படும் இன்டர்போல் போன்ற நிறுவனங்கள் நாடுகளுக்கு இடையிலான இரகசிய புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது சக பொலிஸ் அதிகாரிகளுடனே தவிர இராணுவ அதிகாரிகளுடன் அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு மிக முக்கியமான விடயம் தற்போதைய கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் உத்தியோகபூர்வ பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லை என்பதாகும். இது எதிர்காலத்தில் அனாவசியமான சட்டப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது அனுமானம்.

சந்திரபிரதீப் 

---------------------------
by     (2019-12-20 16:59:15)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links