(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 18 பிற்பகல் 08.20) முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு வழக்கு விசாரிக்கப்பட்டு விபத்து ஒன்றுடன் தொடர்புபட்ட சாரதிக்கு தண்டப்பணம் அறவிட்டு நிறைவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பிலேயே சம்பிக்க ரணவக்கவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல லிவேரா கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனயீனமான வகையில் வாகனம் செலுத்தி நபர் ஒருவருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் வாகன விபத்து இடம்பெற்றதன் பின்னர் சாரதியாக வேறு ஒருவரை முன்னிலைப்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது பாராளுமன்ற சபாநாயகருக்கு முன்கூட்டியே அறிவித்து இருக்க வேண்டும். அந்த நடைமுறையை இவர்கள் செயல்படுத்தவில்லை. நீதவான் ஒருவரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு கைது செய்ய வந்த போலீசாரிடம் இருக்கவில்லை.
நீதிமன்றம் மூடப்பட்ட பின்னர் சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைப்பதன் நோக்கமாகவே. "முன்னாள் அமைச்சர்கள் இருவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூவரை வேட்டையாட முயற்சி..!" என்ற தலைப்பில் கடந்த 15ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெமட்டகொடயில் உள்ள கொழும்பு குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதோடு அவருக்கு ஆதரவாக பல சட்டத்தரணிகள் அங்கு திரண்டுள்ளனர். இதேவேளை தெமட்டகொட கொழும்பு குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு முன்பாக ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சார்பில் வெளியிடப்பட்ட காணொளி இதோ
---------------------------
by (2019-12-18 16:30:19)
Leave a Reply