~

தூதரக வரப்பிரசாதம் கொண்ட பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த வன்புணர்வை கூறியதன் பின் அவரை குற்றவாளியாக்கி சிறையில் அடைத்து வரலாறு படைத்த ஒரே உலக நாடு என்ற பெருமை இலங்கைக்கு..!

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 16 பிற்பகல் 11.45) தவறான தகவல் வழங்கியமை மற்றும் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை ஆகிய குற்றவியல் சட்டக் கோவையின் 120 மற்றும் 190 ஆவது சரத்துக்கு அமைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன 16ம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவிற்கு இடம்பெற்ற அச்சுறுத்தல் மற்றும் வதைகள் தொடர்பாக இரகசிய பொலிசாரின் விசாரணைக்கு அமைய குறித்த வழக்கு 17 ஆம் திகதியே எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. இதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. இது இவ்வாறு இருக்கும்போது 16ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கூறிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி கைது செய்யப்பட்ட கானியா கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது கானியாவின் வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் எனவும் சிசிடிவி சாட்சி மற்றும் தொலைபேசி சாட்சிகளின் அடிப்படையில் இவருடைய குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் சாட்சிகள் இல்லை எனவும் நீதவான் அறிவித்தார்.

சாட்சி பரஸ்பரம் இல்லை.. 

சம்பந்தப்பட்ட பெண் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தனது கட்சிக்காரரின் முதலாவது வாக்குமூலம் அச்சுறுத்தல் காரணமாக வழங்கப்பட்டதாகவும் கடுமையான அச்சத்திற்கு உள்ளாகி இருந்தபோதே அவர் அந்த வாக்குமூலத்தை அளித்ததாகவும் கூறியிருந்தனர். கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட காரணத்தால் தனது கட்சிக்காரர் உண்மையை கூறாது சாட்சி அளித்ததாகவும் எனினும் அதன் பின்னர் அவர் தனக்கு நடந்த உண்மைகளை வாக்குமூலமாக அளித்திருப்பதாகவும் சுமார் இருபத்தி ஆறு மணித்தியாலங்கள் அவர் வழங்கிய வாக்கு மூலங்களில் பரஸ்பரம் இல்லை எனவும் அவரது கணவர் வழங்கிய வாக்குமூலத்தில் பரஸ்பரம் இல்லை எனவும் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் அளிக்கப்பட்ட வாக்குமூலத்துடன் ஒத்துப்போவதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தனது கட்சிக்காரர் மகளின் ஆசிரியரது வீட்டிற்கு சென்று திரும்பி வரும்போது குழப்பத்தில் இருப்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி ஆவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினார்.

குறித்த பெண் ஆசிரியரின் வீட்டிற்குள் வைத்து அச்சுறுத்தலுக்கும் வன்புணர்விற்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் குறித்த வீட்டிற்குள் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குறித்த ஆசிரியரின் கணவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுபவர் என்று தகவல் வெளியானதாக லங்கா ஈ நியூஸ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

கானியா என்ற பெண் ஆசிரியரின் வீட்டுக்குள் நுழைந்த பின்னர் அந்த வீட்டுக்குள் சந்தேகத்திற்கிடமான எவரும் நுழைந்தமைக்கான சிசிடிவி காட்சிகள் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் சிசிடிவி கமராவிற்கு அகப்படாமல் சந்தேகநபர்கள் வீட்டிற்கு சென்று இருக்க வாய்ப்புள்ளது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கானியாவின் சட்டத்தரணிகள் முன்வைத்த பிரதான வாதம்...

கானியாவின் சட்டத்தரணிகளின் பிரதான வாதம் தனது கட்சிக்காரர் ஒரு போதும் நாட்டை அபகீர்த்திக்கு உட்படுத்த வில்லை எனவும் அந்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் குறிப்பிட்டனர். காரணம் அவர் தனது வாக்குமூலத்தில் அல்லது முறைப்பாட்டில் நாட்டுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ இந்த விடயத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி இருக்கவில்லை. அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலேயே வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் பெண் மாத்திரமன்றி அவருடைய கணவரும் சுவிஸ் தூதரக அதிகாரிகளும் தமது வாக்குமூலத்தில் நாட்டுக்கு எதிராகவோ அரசாங்கத்திற்கு எதிராகவோ எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சட்டத்தரணிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.

உண்மையிலேயே இந்த விடயமானது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான தமிழ் டயஸ்போராக்களின் சதித்திட்டம் எனவும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சி எனவும் ராஜபக்ஷக்களுக்கு ஆதரவான ஊடகங்களே செய்தி வெளியிட்டு வந்தன.

எனினும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டி வந்ததாகவும் கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்தார்.

ஆனாலும் சம்பவம் இடம்பெற்ற பிறகு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கானியாவின் சட்டத்தரணி வரிசைப்படுத்தி விளக்கினார். சுவிஸ் தூதரக பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் முதலில் தான் தொழில் புரியும் தூதரகத்திற்கு அறிவித்துள்ளார். அதன்பின்னர் தூதரகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் அடிப்படையில் முதலாவதாக இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சருக்கு தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இது இராஜதந்திர நடைமுறையாகும். அதன்பின்னர் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு இரகசிய போலீசாருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பணிப்புரை விடுத்தது. அதன் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த இரகசியப் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயற்சித்தனர். அதனடிப்படையில் குறித்த பெண் சுமார் 26 மணித்தியாலங்கள் இரகசிய பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்து ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். அதுமாத்திரமன்றி சுவிஸ் தூதரகத்தின் உத்தியோகத்தர்கள் இருவரும் இரகசிய பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்தனர். எனவே விசாரணைக்கு குறித்த பெண் ஒத்துழைப்பு வழங்கவில்லை என எப்படி கூறுவது? நாட்டை அபகீர்த்திக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறுவது எப்படி? எனவே பாதிக்கப்பட்ட கானியா குற்றவாளி அல்ல சந்தேகநபரும் அல்ல அதனால் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தவறு என சுட்டிக்காட்டினார்.

எனினும் கானியாவின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்ளாத கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன சுவிஸ் தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண்ணை எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நாட்டை உலகத்தின் முன்னிலையில் சிரமத்துக்கு உட்படுத்தியது யார்?

இந்த நடவடிக்கையின் மூலம் தூதரக வரப்பிரசாதம் உள்ள அதிகாரி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட்டதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபராக கருதப்பட வேண்டிய குறித்த பெண்ணை குற்றவாளியாக மாற்றி அவரை சிறையில் அடைத்த உலகின் பெருமை மிகுந்த நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுள்ளது. இலங்கை நாடு என்பது இலங்கை மக்களை குறிக்கும். எனவே நாட்டை நாட்டு மக்களை உலகத்தின் முன்னிலையில் சிரமத்திற்குள் தள்ளியது யார்? பாதிக்கப்பட்ட கானியாவா? சுவிஸ் தூதரகமா? இல்லையேல் கோட்டாவின் அரசாங்கமா? இதனை எதிர்காலமே தீர்மானிக்கும்.

இந்த நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டதன் பின்னர் சுவிஸ் நாட்டின் ஊடகங்கள் அதனை விசேட செய்தியாக மாற்றி தனது தூதரக அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுவிஸர்லாந்து அழைத்துச் செல்வதை தடுத்து நிறுத்தி இலங்கை சிறையில் அடைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டன. இவ்வாறான செய்தி சுவிஸர்லாந்து ஊடகங்களில் வெளியிடப்பட்டபோது பயணிகள் பொதுப்போக்குவரத்து பஸ்களில் சென்று கொண்டிருந்த இலங்கையர்கள் இலங்கை நாட்டை இந்த அளவு கேவலமான நிலைக்கு தள்ளி விட்டார்கள் என தங்களுக்குள் நொந்து கொண்டதாக சுவிஸ்லாந்தில் உள்ள இலங்கையர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டது நானே கோட்டா சொல்கிறார்..

இதேவேளை கைது செய்யப்படுவதற்கு முன்னர் சுவிஸ் தூதரக அதிகாரிகளை அழைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். அதன்பின்னர் ஊடகங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாபய ராஜபக்ச சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட விடயத்தில் பாதிக்கப்பட்டது கடத்தப்பட்ட பெண் அல்ல எனவும் பாதிக்கப்பட்டது தானே எனவும் ஊடக பிரதானிகளும் தெரிவித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது வெள்ளை வானில் கடத்தப்பட்ட சிலர் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவிற்கு உடனடி தகவல் அறிவிக்கப்பட்டதால் உயிருடன் மீட்கப்பட்டனர். அந்த அடிப்படையில் ஊடகவியலாளர் கீத் நொயார், போத்தல ஜயந்த ஆகியோர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டவர்களில் முக்கியஸ்தர்கள் ஆவர். வெள்ளை வானில் கடத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிக்கு நேரடியாக தகவல் வழங்கப்பட்டதால் உயிருடன் மீட்கப்பட்டனர். துரதிஷ்டவசமாக இன்று நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயல்படுகிறார். எனவே இதற்கு பின்னர் கடத்தப்படுவோர் காணாமல் ஆக்கப்படுவோர் அச்சுறுத்தலுக்கு வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவோர் கானியாவிற்கு ஏற்பட்டது போல பாதிக்கப்படும் அனைவரும் வெளியில் வர மாட்டார்கள் அவர்கள் விருப்பத்துடன் மரணத்தை தேடிக் கொள்வார்கள்.

கோட்டாவின் 'கோல்டன் ஹன்ரட்ஸ் டேஸ்'..

அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றதன் பின்னர் அது கடந்து செல்லும் முதல் 100 நாட்களை 'கோல்டன் ஹன்ரட்ஸ் டேஸ்' (தங்கமான நூறு நாட்கள்) என்று அழைப்பர். அதற்கு காரணம் குறித்த 100 நாட்களில் அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் மக்கள் ஏற்றுக் கொள்வர். எனவே அனேகமான அரசாங்கங்கள் குறித்த 100 நாட்களில் நாட்டு மக்களுக்காக நாட்டுக்காக சில முக்கிய தீர்மானங்களை எடுப்பது வழக்கம். ஆனால் கோட்டாபய ராஜபக்ச தனது 'கோல்டன் ஹன்ரட்ஸ் டேஸ்' நாட்களில் எவ்வாறான சாக்கு விளையாட்டை காட்டுகிறார் என்பதை சுவிஸ் தூதரக சம்பவத்தின் மூலம் நாட்டு மக்கள் நன்கு உணர்வர்.

ஆனால் சாக்கு விளையாட்டின் மூலம் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை இன்னும் குறுகிய காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிர்க்கட்சி அல்லாமல் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் உணர்த்துவர் என்பதை எழுதி வைத்துக் கொள்ளவும்.

-சந்திரபிரதீப்-

(புகைப்பட உதவி - லங்காதீப)

---------------------------
by     (2019-12-17 14:31:34)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links